ஒன்றே...
......
ஆதிநாளில்
இரண்டு மகன்களுக்கும்
ஒரே நிறத்தில் சட்டைகள்
ஒரேமாதிரி சாப்பாட்டு தட்டுகள்
தோசைவடிவத்திலும் கூட
பிசிறக்கூடாது
தீபாவளிக்கு
துப்பாக்கிகள்வாங்கினாலும்
அச்சு மாறாமல்
விருந்தாளிகளும்
தெரிந்துதான்
எதையும் வாங்கிவருவார்கள்
படுக்கையிலும்
தாயின் இடது வலது
குடங்கையில்தான் பங்கு
அத்தனையும்
பெற்றவள் நோயில் முடங்கி
ஒருத்தன்வீட்டிலேயே இருந்து
போகும்வரை......
*********

தாயின் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை
ReplyDelete🙏
Deleteமனதை தொடும் பதிவு ஐயா
ReplyDelete🙏
Deleteஇக்கவிதை மனதின் ஆழம்வரை ஊடுருவி செல்கிறது 🙏🙏🙏
Deleteநெகிழ்ச்சி தருகிறது ஐயா
Deleteஅம்மா.......
ReplyDelete👌👌👌👌
ReplyDeleteமனதைத் தொட்ட வரிகள், ஐயா. இதுபோன்ற தாய்மார்களும் உண்டு; அதே நேரத்தில், பிள்ளைகளிடம் சமநிலை காக்க முடியாமல் போகும் தாய்மார்களும் உண்டு. வாழ்க்கை பல நிறங்கள் கொண்டது.
ReplyDelete🙏
Deleteஇன்றைய வாழ்வியல் யதார்த்தம்
ReplyDelete🙏
Deleteசிறந்த வரிகள் ஒவ்வொரு சொல்லும் ஆழமான பொருள் உணர்த்தக்கூடியன. தாயின் அன்பிற்கு ஈடு இணை கிடையாது என்பது அய்யாவின் வரிகளில் நன்கு விளங்கும். இருப்பினும் இறுதி காலத்தில் தாயின் நிலை மனதை தொடும்படி அமைந்துள்ள விதத்தை எண்ணி வியக்கிறேன்.
ReplyDelete🙏
Delete🙏
ReplyDeleteதாயின் சிறப்பு கூறும் மனதை தொட்ட வரிகள் அய்யா
ReplyDeleteஒன்றெனப்படுவது யாதெனின் பெற்றோர் ஒன்றும் இல்லாமல் போவது வரை... அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
ReplyDeleteஅருமை அய்யா அம்மாவிற்கு நிகர் அவரே....
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteஎனக்குத் தெரிந்தவரை ஐயாவுக்கு நிகர் யாருமில்லை
ReplyDelete