Friday, 10 July 2026

ஒன்றே..

 















ஒன்றே...
......

ஆதிநாளில்

இரண்டு மகன்களுக்கும்

ஒரே நிறத்தில் சட்டைகள்


ஒரேமாதிரி சாப்பாட்டு தட்டுகள்

தோசைவடிவத்திலும் கூட 

பிசிறக்கூடாது


தீபாவளிக்கு 

துப்பாக்கிகள்வாங்கினாலும் 

அச்சு மாறாமல்


விருந்தாளிகளும்

தெரிந்துதான்

எதையும் வாங்கிவருவார்கள்


படுக்கையிலும்

தாயின் இடது வலது

குடங்கையில்தான் பங்கு


அத்தனையும்

பெற்றவள் நோயில் முடங்கி

ஒருத்தன்வீட்டிலேயே இருந்து

போகும்வரை......

*********

ப.திருநாவுக்கரசு

9 comments:

  1. தாயின் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை

    ReplyDelete
  2. மனதை தொடும் பதிவு ஐயா

    ReplyDelete
    Replies
    1. இக்கவிதை மனதின் ஆழம்வரை ஊடுருவி செல்கிறது 🙏🙏🙏

      Delete
  3. மனதைத் தொட்ட வரிகள், ஐயா. இதுபோன்ற தாய்மார்களும் உண்டு; அதே நேரத்தில், பிள்ளைகளிடம் சமநிலை காக்க முடியாமல் போகும் தாய்மார்களும் உண்டு. வாழ்க்கை பல நிறங்கள் கொண்டது.

    ReplyDelete

ஒன்றே..