பூவுலகத் தந்தை
🙏🙏🙏
கள்ளமில்லை
கபடமில்லை
அதனால்
உள்ளம் மரிக்கவில்லை!
உணவை விட்டு
உடையைச் சுருக்கி
நடையைப் பெருக்கி
படைமுகம் வென்றார்!
உடல் துளை ரவைகள்
உள்ளத்தைத்
தொட்டுத் தான்
வெட்கிச்சிவந்து
வெளிவரத் தயங்கின!
வெள்ளாடை பெற்றது
உத்தமன் ரத்தம்-அது
மெய்யெழுதிய மை!
உயிரைப் பரிசளித்து
ஒரு பூவின் சிரிப்பை
வெல்ல வந்த
பூவுலகில் தந்தை!
காலம் கடந்தும்
மரணத்தை
வெல்லும்
வெள்ளந்திச்
சிரிப்'பூ'க்கள்!
----------
ப. திருநாவுக்கரசு

👍👍
ReplyDeleteவெள்ளந்திச்
ReplyDeleteசிரிப்"பூ"க்கள்
A fitting tribute to the Mahathma