Thursday, 15 October 2026



தடுக்கும் படிகள்
*******************

அம்மாவின் பாட்டிதான்
அம்மாவின் தாயை
இன்னொரு வீட்டுக்கு போற
பெட்டைப்பிள்ளை
தெருமுனை பள்ளிக்கூடம்
ஏன் போகனும் என்றே
சொல்லிச் சொல்லி
பஞ்சாரக்கூடை கோழியாக
கவிழ்த்துப்போட்டாள்.

புகுந்தவீட்டுக்குப் போறவ
படிதாண்டிப்போனதாக
காதில்விழக்கூடாதென
பத்தினி முத்திரை
அம்மா வென்றெடுத்தாள்!

பள்ளிக்கூடம் போன எனக்கு
கண்ணகியின் பாதங்களை
பூமாதேவி பார்த்ததில்லை
என்று தமிழ்ப்பாடம் வந்திருந்தது!

அட காலம் போய்விட்டது
முக்காலடி படியைத்தாண்டாத
பரம்பரை முடிவில்
நாலேகால் மீட்டர்
உயரத்தைதாண்டினாள்
பரணிகா!

வேண்டிய உயரம் தாண்டியிருக்க
அவர்களின் தேவை என்ன?

பெண்கள் வீட்டில்
காலம்காலமாய் இருந்த மனிதர்களுக்குப்பதிலாக
பரனிகாவுக்கு உதவிய
நெடுங்கோல்கள் நிறைய
இருந்திருக்கலாம்!

..................

ப.திருநாவுக்கரசு


8 comments:

  1. காலம் மாறிவிட்டது. பெண்களின் சுதந்திரம் பெருகிவிட்டது ஆனால் ஆண்களுக்குத்தான் சுதந்திரம் குறைகிறது

    ReplyDelete
  2. மனதை அள்ளிய கவிதை.
    மூன்று தலைமுறைகளாய் மிடியாததை பரணிகா சாத்தியப்படுத்தியது அந்த நிறைய நெடுங்கால்களால் தான் என்பது எத்தனை எதார்த்தம் எத்தனை உண்மை. அன்பின் வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  3. கல்வி கற்க
    களமிறங்கிய கால்கள்
    இன்று நெடுங்கோல்களைத் தாண்டுகின்றன

    ReplyDelete
  4. பரணிகாவுக்கு வாழ்த்துக்கள்.
    தலைமுறை மாற்றம்,
    வாயு வேகம்.
    அருமை ஐயா.

    ReplyDelete
  5. பகுத்தறிவு வழியே மிகச்சிறப்பு

    ReplyDelete

தடுக்கும் படிகள் ******************* அம்மாவின் பாட்டிதான் அம்மாவின் தாயை இன்னொரு வீட்டுக்கு போற பெட்டைப்பிள்ளை தெருமுனை பள்ளிக்கூடம் ...