Friday, 4 September 2026

தேசப்பற்றின் பாடம்


 ஆறுதல் பரிசுமில்லை..

--------------------------------------

தமிழ்க் கப்பல்களை

 இயக்கியது நீராவி!

அதை சரித்திரத்தில்

எழுதியது  ஓர்ஆவி!


நாட்டுக்கு வெளிச்சம்தர

ஒருதியாகத்தீபம்

தானே செக்கிழுத்து

எண்ணை ஆட்டி

 ஊற்றிக்கொண்டது!


வளமும் வறுமையும்

வழக்காடி வழக்காடியே

ஒரு தேசிய வழக்கறிஞனை

சிறைக்குள் போட்டது!


இன்று

எட்டாம் வகுப்பு தேறாத

சுதந்திர இந்தியன் 

விமானம் வாங்கும்

அரசியல் வாழ்க்கை

ரெக்கை கட்டிப் பறக்கிறது!

நீ கண்ட துறைமுகமோ

உன்னையே

 தூர்த்துக் குடித்துவிட்டதே!


இந்தியக் காவியங்களில்

அஞ்ஞாதவாசம் முதல்பரிசு

வனவாசம் சிறப்புப் பரிசு

நாற்பது ஆண்டு

சிறைவாசத்திற்கு

ஆறுதல் பரிசும் 

இல்லாமல் போச்சே ஐயா..!

************

ப.திருநாவுக்கரசு

...............

(05-09-1872 கப்பலோட்டிய தமிழன் பிறந்தநாள்)

2 comments:

  1. தேசப்பற்றையும் தியாக உணர்வையும் அழகாகப் பதிவு செய்த தங்களின் கவிதை மனதை நெகிழச் செய்தது, ஐயா. 🙏💐

    ReplyDelete

தடுக்கும் படிகள் ******************* அம்மாவின் பாட்டிதான் அம்மாவின் தாயை இன்னொரு வீட்டுக்கு போற பெட்டைப்பிள்ளை தெருமுனை பள்ளிக்கூடம் ...