திசாபுத்திகள்
%%%%%%%%
இரண்டுதிங்களாக
இருந்த சூடும் சுரணையும்
வாக்குவெப்பமண்டல
மாறுதலால்
திசைமாறுகின்றன!
திராவிடகுருவின்
பகைக்காரகன்
தென்திசையில்
பலம்பெறுகிறான்!
புத்திக்காரன்
பலவீனமாகிவிட்டதால்
ஜனசமுத்திரம்
உப்பு குறைந்து
உணர்ச்சி தடுமாறும்!
சுக்கிரனால்
வாசனாதி திரவிய ஆசையும்
ஆடை அணிகல
முகக் கவர்ச்சியும்
உச்சம்பெறும்!
சுயமரியாதையில் ஊறியஆடைகள்
நிழல்காய்ச்சலில் கிடக்கும்!
சூரியதிசையைவிட்டு
சனிதிசைக்கு
கூட்டணி நிழல் கோள்கள்
இடம் பெயரும்!
மேற்கில் முடிந்தாலும்
கிழக்கில் எழுந்தாலும்
தெற்கில் பலம்பெறும்
சூரியன்!
ப.திருநாவுக்கரசு

அருமை ஐயா அறிந்தவர்களுக்கு புரியும்
ReplyDelete"வாய்ச்சொல் வீரர்களிடம் வாய்மை இருப்பதில்லை; நெஞ்சில் தூய்மையும் இருப்பதில்லை!"
ReplyDelete— முத்தமிழறிஞர் கலைஞர்
This comment has been removed by the author.
ReplyDeleteபறவைகள் திசை மாறத் தொடங்கி விட்டன.
ReplyDeleteகண்ணதாசனின் " யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே, அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் தெரியலே"
வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
தங்கள் வேதணை நன்கு புரிகிறது. தமிழகத்தின் நிலையை நன்கு கணித்து ஜாதகப் பலன் கூறியுள்ளீர்கள். தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteசைக்கிள் ஓட்டவே தடுமாறும் ஒருவனிடம் விமானத்தைக் கொடுத்து ஓட்டச் சொல்லி இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். குறிப்பாக இளையர்கள்.
சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என்பதற்கு ஏற்ப நடந்துகொண்டு உள்ளார்கள். அவர்களைத் திருத்த பெருசுகளும் முன் வராமல் பேரன் சொன்னான் பேத்தி சொன்னாள் என்று அவர்களும் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.
விதியே தமிழ்ச்சாதியை என்ன செய்ய நினைத்தான் என்ற வரிகள்தான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது.
வெப்ப வரி(ல)
ReplyDeleteவெப்ப வரி(லி)கள்
ReplyDeleteசிரிப்பதா அழுவதா
ReplyDeleteIt’s very interesting to see a knowledge-fusion of astronomy and Tamil Nadu politics with a tinge of astrology (as I gauge) by a disciple of Ayya Periyar.
ReplyDeleteThough the current political scenario after the election is disappointing, your last words are soothing. May Dravidian Philosophy live as long as humans live in the world!
எல்லோரின் குமுறல் தங்கள் வரிகளில் அய்யா
ReplyDelete