தயவின் வழி
🔥🔥🔥🔥🔥
அருளே குழந்தையாகி
அருளே உலகுலாவி
அருளால் பசியை ஆற்றி
அருளின் உண்மை பாடி
அறிவெனும் சபையைக் கூட்டி
அருட்சுடர் ஒளியை ஏற்றி
அருள் நிறை வாழ்வைக் கூறும்
அருள் நிறை மாந்தர் என்றும்
அகிலத்தில் மரித்தாரில்லை!
அகத்தினில் அருள்மிக்காரால்
அனைத்துயிர் துயர்கள் நீங்கும்
அடுத்தவர் நலம் நினைவே அருளெனும் சொல்லின் மகிமை!
அனைவரும் சமமென ஒளிரும் அருட்பெரும் ஜோதி ஒன்றே!
அருட்பிரகாசர் வழியே நிற்றல் அன்றாடம் நமக்குப் பாடம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏
ப. திருநாவுக்கரசு

நன்னாளில் நல்ல பதிவு
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஅடுத்தவர் நலம் நினைவே அருள் என்று போற்றிய வள்ளலார் வழி நடப்போம்
ReplyDeleteநன்றி அன்பு குமார்
Delete🙏🙏🙏
ReplyDeleteநன்றி
Delete"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்."
ReplyDeleteகருணையின் உச்சம் தொட்டவன்.அவன் அடி தொழுது வாழ்வோம்
நன்றி ஐயா
Deleteஅருள் நிறைந்த பதிவு...அருமை பெரியப்பா
ReplyDeleteநன்றி அன்பே
Deleteஉள்ளத்தில் ஔி உண்டாயின் வாக்கினில் ஔி உண்டாகுமென்றார். அதுபோல் உள்ளத்தில் அருள் உண்டாயின் செயல் எல்லாமும் அருள் வடிவாகவே இருக்கும்.தொடர்புடையார் மாட்டு நிகழ்வது அன்பு எனில் தொடர்பில்லாதவர் மாட்டு தோன்றுவது அருள் என்பது என்றுரைத்தது மிகச்சரிதானே!
ReplyDelete