மலர்ந்தும் மலராத
ப.திருநாவுக்கரசு
உறவென்று எண்ணி
உள்ளத்தைத் திறந்தால்
உள்ளறுத்துச் சென்று
புறம்நின்று நகைக்கும்!
நட்பென்று நாடி
நன்மைசெய ஓடி
நலம்செய்து முடித்தால்
நஞ்சாகிநாசமாகும்!
இளமைதரும் முடிவும்
முதுமைபெறா விடையும்
புலமைசெயும் தவறும்
தலைமைபெறும் சரிவும்
கடமைவழி தடையும்
செழுமைவரை உறவும்
வறுமைதொட பிரிவும்
நூல்கள்தரா வழியும்
பார்வைபெறா விழியும்
பழகப் பழக மாறும்!
விலக விலக முகங்களும்தான்!

உண்மை அத்தான்.
ReplyDeleteஉண்மை மனதையும், முகத்தினையும் மறைத்து முகமூடி அணிந்து வலம் வருபவர்கள் இன்று ஏராளம், ஏராளம்
நன்றிங்க அன்பு குமார்
Deleteமிகச் சிறப்பு ஐயா.. உணர்ச்சி மிகுந்த படைப்பு.. அருமை..
ReplyDeleteஅன்புடன்..
கவித்தலம் கை. அறிவழகன்
(முனைவர் கை.அறிவழகன்)
நன்றிங்க அன்பு பேராசிரியர்
Deleteவிலக விலக முகங்கள் மாறும் என்ற வரிகள் வாழ்க்கையில் தினம் தினம் சந்திக்க நேரிடுகிறது ஐயா!
ReplyDeleteநன்றிங்க அஜ்முதீன்
Deleteஅண்ணன், பொன்னான வரிகள். ஆங்கிலத்தில் " peel the onion" என்பார்கள். உண்மை.
ReplyDeleteநன்றி அன்பு முத்து
Delete