Friday, 28 November 2025
வினாவும் கேள்வியும்
Thursday, 30 October 2025
கண்டறியாதன… …
பிரும்மாண்ட
பொதுக்கூட்டம்
கலைந்தது திடலில்.
குப்பைகள் அகற்றிய
என்தோழன்
கண்டறியாதன கண்டான்.
தலைவனுக்கு மூச்சுத்தினறக்
குளிப்பாட்டிய சோப்புக்கட்டிகள்
சிதறிக் கிடந்தன.
அடுக்கு மொழிகளும் வாழ்த்துகளும்
மிதிபட்டுச்சிதறி
குற்றுயிராய்க் கிடந்தன.
எதிரியை வசைபாடி
தங்கள் தலையில் துப்பிக்கொண்ட
எச்சில் ஈரம்பட்டுக் கிடந்தது பூமி.
தாக சாந்தி தந்துவிட்டு
உடைத்துக் கொண்ட
மதுப்புட்டில்கள் குத்திக் கிழித்த
குருதியில் குந்த அடித்துக்கொண்டன
ஈக்கள்.
மாநகர ஏமாளிகள்
சூட்டிய மலர்மகுடம்
மண்ணில் குப்புறக்கிடந்து.
கடலைப்பொட்டலக்
காகிதக்குப்பையுடன்
கண்ணீர் மகஜர்கள்
கசங்கிக்கிடந்தன.
தின்ன இரைதேடி
திடலுக்குவந்த
நாயும் குட்டியும்
தலையிலடித்துக்கொண்டு
திரும்பிச்சென்றன.
காரணம் தெரியாமல்
கழன்ற காலணிகள்
போக மனமில்லாமல்
மயங்கிக் கிடந்தன.
ஃஃஃஃஃ
ப. திருநாவுக்கரசு
Thursday, 23 October 2025
பூஞ்சை
Saturday, 18 October 2025
போகாது… வரும்!
எழுதப்படாத
சுய சரித்திர வரிகளுக்கு
நினைவாற்றல் அதிகம்!
தூங்கையில்
எழுப்பி கதைசொல்லும்
சாமக்கோழி அது!
தப்பான விடைக்காக
5ஏ டீச்சர்
முருகனைக்
குட்ட சொன்னதில்
விழுந்த தலைமேடு
படுகிறது தொடுகையில்!
சேர்ந்துவந்த சேகர்
குச்சி ஐஸ் வாங்கி
தனியாகப் போய் உறிஞ்சியது
இன்னும் கரையாமல்
நிற்கிறது!
டீச்சர்கொடுத்த சுதந்திரநாள்
'பெப்பர்மன்ட்'மிட்டாய்கள்
அம்மா பார்க்கும் முன்
தடுக்கிச் சிதறி
கிடக்கின்றன இன்னும்
எறும்பு ஏறாமல்!
பட்டாசுக்கு பணமில்லாமல்
பக்கத்து வீட்டுப் பிள்ளை
மத்தாப்புகளையே
பார்த்துக்கச் சொன்ன
அப்பாவின் ஒளிமங்கிய
சிரிப்பு மறையவில்லை!
ஒரு நள்ளிரவு
சாக்குருவி ஓசைக்கு
விழித்த காதுகளில்
அம்மாவிடம் அப்பாமுனகிய
“எது கேட்டும் வாங்கித்
தரமுடியவில்லையே”
கேட்டது !
கோழி கூவிவிட்டது
பள்ளிக்கூடம் போக
கட்டணமில்லா
கட்டை வண்டி கிடைத்தது!
ஃஃஃஃஃஃஃஃஃஃ
ப. திருநாவுக்கரசு
Sunday, 12 October 2025
விடைபெறும் முன்
Wednesday, 8 October 2025
ஊமை வலி
எங்காவது
கொண்டு விட்டுவிடலாம்
என முடிவானது.
அன்று
எல்லாருமாக
நான் சம்மதிக்கும்படி
அந்த முடிவைச்
சொன்னார்கள்.
எனக்கு தெரியாத
சுமைஅவர்களின்
பெரும்கனமானது
புரியாமல்
எதையும் கேட்காமல்
தலையசைத்தேன்!
இந்த நிமிடம்வரை
அதன் 'மியாவ்கள்'
அப்பா பசிக்கிறது
என்றுதான்
எனக்குக் கேட்டிருக்கிறது.
நாளை
திசைதெரியாத இடத்தில்
விட்டு விட்டபின்னும்
அந்த'மியாவ்கள்'
யாருக்கும் புரியும்?
அது யாரைத்தேடிச்
சொல்லியிருக்கும்
அதன் பசியை?
*****
ப. திருநாவுக்கரசு
Saturday, 4 October 2025
அருளே வழி
தீராநதி
ஆடிப்பெருக்கு ***************** அன்று .. சோலை மலர்களை சேலையாய்ப் போர்த்தி உன் மீன்விழிகளை விழித்து குயிலின் இசையுடன் மயில...
-
நலம் தரும் சொல்-முகநூலில் படித்ததை நன்றியுடன் பகிர்கிறேன் முதியோர் காப்பகம் ஒன்றிற்கு ஒரு மணியார்டர் வந்தது. "இத்துடன் ரூபாய் ஆயிரம் ...
-
ஆளாமல் ஆண்ட குடும்பத்தின் அரசன் கிழவனானான்! அவன் முனகல்களில் எரிமலை ஒன்றின் இரைச்சல் இருந்தது! வடிந்து வடிந்து பெருநதி காட்டிய மணலோ பலரால் ...
-
எங்காவது கொண்டு விட்டுவிடலாம் என முடிவானது. அன்று எல்லாருமாக நான் சம்மதிக்கும்படி அந்த முடிவைச் சொன்னார்கள். எனக்கு தெரியாத சுமைஅவர்களி...






