Monday, 21 September 2026


 


முகமனும் முகமண்ணும்
*************************
மணவிழாக்களில்
மளிகைக் கடைகளில்
விற்பனைக் கூடங்களில்
நமக்கான வரவேற்புகளில்
முன்னால் நிற்கிறது
முகமன்.

முகமன்தான்
நம் வருகைக்கு
முதல் அனுமதி முத்திரை!
அங்கே வெயிலுக்கு இளநீரும்
குளிருக்கு ஆவி ஆடும் தேநீரும்
ஆனந்தத்திற்கு  அறுசுவையும்
வந்துவிடும்.

அரசு அலுவலகங்களில்
கையூட்டானாலும்
மெய்ஊதியமானாலும்
பெறுவதில் இல்லாத முகமன்
வேலையில் எப்படி வரும்?

வங்கிகளின் முகங்களில்
செல்வக்கடவுள்
எப்போதோ
காணாமல்போய் விட்டது.
வாடிக்கையாளரை
வேடிக்கை பார்க்கிறது!

தெரியாத மக்கள்
முடியாத மனிதர்களுக்கான
நலத்திட்ட சிப்பந்திகளிடம்
முகமே இல்லாதபோது
முகமன் எங்கிருந்து வரும்?

நாள்பட்டஉறவு வரும்               இல்லங்களில்                             தேவைப்பட்ட மக்கள் வரும்அலுவலர்களிடமும் 

நம்மைத் தள்ளிவிரட்ட
ஒரு முகப் பூச்சிக்கொல்லி
இருக்கவே இருக்கிறது.                 
முகமனை மூடும் முகமண்!

மனக்கீழடியில் புதைந்துகிடப்பதை அகழ்வாராய்ச்சி செய்யலாம்.

*********
ப.திருநாவுக்கரசு


13 comments:

  1. அய்யா வணக்கம்
    அருமை மிகு தலைப்பு
    எங்கும் நேரடி வர்த்தகம் தனி உண்மை வடிவத்தை இழந்து வரும் நிலையில் முகமன் என்ற மரியாதைக்குரிய சம்பிரதாய வரவேற்று காணாமல் போய்விட்டது.
    அதனை தொட்டு வரிகளாய் வடித்துள்ளீர்கள் வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  2. ஐயா மிகச் சிறந்த தலைப்பு நல்ல சொற்கள் உள்ளது உண்மையினை வெளிப்படுத்துகிறது அற்புதமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. முகத்தை இழந்த உலகில் மானுடம் தேடிக்கொண்டு ஆருக்கின்றோம்

    ReplyDelete
  4. முகமனை மூடும் முகமண். அழகான சொற்றொடர்.வாழ்த்துகள்

    ReplyDelete
  5. மனிதர்களிடையே மறைந்து வரும் மரியாதையையும் மனிதநேயத்தையும் அழகாகச் சுட்டிக்காட்டும் அருமையான கவிதை ஐயா.
    “முகமனை மூடும் முகமண்” என்ற சொல்லாடல் மனதைத் தொட்டது. வாழ்த்துகள் ஐயா! 🙏💐

    ReplyDelete

தடுக்கும் படிகள் ******************* அம்மாவின் பாட்டிதான் அம்மாவின் தாயை இன்னொரு வீட்டுக்கு போற பெட்டைப்பிள்ளை தெருமுனை பள்ளிக்கூடம் ...