எங்காவது
கொண்டு விட்டுவிடலாம்
என முடிவானது.
அன்று
எல்லாருமாக
நான் சம்மதிக்கும்படி
அந்த முடிவைச்
சொன்னார்கள்.
எனக்கு தெரியாத
சுமைஅவர்களின்
பெரும்கனமானது
புரியாமல்
எதையும் கேட்காமல்
தலையசைத்தேன்!
இந்த நிமிடம்வரை
அதன் 'மியாவ்கள்'
அப்பா பசிக்கிறது
என்றுதான்
எனக்குக் கேட்டிருக்கிறது.
நாளை
திசைதெரியாத இடத்தில்
விட்டு விட்டபின்னும்
அந்த'மியாவ்கள்'
யாருக்கும் புரியும்?
அது யாரைத்தேடிச்
சொல்லியிருக்கும்
அதன் பசியை?
*****
ப. திருநாவுக்கரசு

👍
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஅருமை அய்யா, சில நேரங்களில் சில மனிதர்களின் திணிப்பை ஏற்க சில பிடித்தவைகளை, பிடித்தவர்களுக்காக பிடிக்காமலே செய்கிறோம்...
Deleteவலி,ஊமையாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது. அடுத்த முறை மியாவ் ஒலி கேட்கும்போது உங்களுக்கு பசிக்கும்
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஇறப்புப் பிரிவை விட , இருக்கும் போதே பிரிவது வேதனையிலும் வேதனை.
ReplyDeleteஆற்றுப்படுத்த வார்த்தைகளைத் தேடுகிறேன்
நன்றி அன்பு குமார்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவலியும் ஏக்கம்
ReplyDeleteகடினம் தான் ஆனாலும் சுகம்
உணவோடு தாய் நீ வருவாய்
என்ற நினைப்பே காத்திருப்பில்....
நன்றி
Deleteஊமை வலி
ReplyDeleteஉயிர் வலி
புரிந்தவர்களுக்கே புரியும்.
புரிந்தவர் அவர்
காத்திருக்கிறார்.
"மியாவ்"-ன்
வருகைக்காக,
அவர்
தன் அன்பு மகனால்
கைவிடப்பட்டவர்.
தன் அன்பு மனைவியை
இழந்தவர்,
"மியாவ்" -ன்
நடைபாதையில்
காத்திருக்கிறார்.
நன்றி
Deleteவாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வாக்கிற்கிணங்க வாழும் தங்களுக்கு மியாவ் என்பது வெறும் ஒலியல்ல! அது ஒரு உயிரின் குரல்.
ReplyDeleteநன்றிங்க ஆனந்
DeleteVery beautifully expressed your love for pets👍
ReplyDeleteThank you Preethimma
Deleteசொல்லொண்ணா பிரிவின் துயரத்தை ஊமை வலியின் மூலம் சிறப்பாக கூறுகிறீர்கள்
ReplyDeleteநன்றி
Deleteஉங்களால் உதவிட முடியாதபோது அதன் பொருட்டு உள்ளத்தால் இரங்குங்கள்.வள்ளலார் வாக்கு எனக்கருதுகிறேன்.இப்போதைக்கு நாம் அதைச்செய்வோம்.
ReplyDeleteநன்றிங்க தோழர்
Deleteஅதற்கு உணவு கிடைக்கக்கூடிய இடத்தில் தான் நீங்கள் அதை விட்டு வந்து இருப்பீர்கள்.. அது உணவு தேடுவதோடு உங்களையும் தான் தேடும்..
ReplyDeleteநன்றி முத்து
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete"மியாவ்."
ReplyDeleteவலி புரிந்தது.
முன்பொரு நாள்
மகனின் ஆசைக்காக
வளர்த்ததும் , அது
யாரும் அறியாமல் எங்களையும்
உலகத்தையும் விட்டே ச் சென்றது.
"மியாவ்" இனிமேல் வேண்டாம்
பிரிவைத் தாங்காமல்
முடிவில் நான்.
மீண்டும்
மகன் கையில் இன்னொரு
"மியாவ்"
வேறு வீடு மாறிச்சென்றபோது
அது எங்களோடு வர மறுத்தது.
பிறகு புரிந்தது
நாய்கள் மனிதர்கள் மேல்
பற்று வைக்கும்
ஆனால் "மியாவ்கள்"
வாழும் இடத்தின் மீது தான்
பற்றாகும்.
சில வலிகள் சுமையானது.
இனி உங்கள் "மியாவ்"
கிடைக்கும் உணவை
சாப்பிட்டுக்கொண்டும்
உங்களைத் தேடிக்கொண்டும்.
அன்பு வலிமையானது
மீண்டும் மியாவோடு சேர்க்கும்.
இடத்தின் மீது பற்று வைக்கும்
"மியாவ் கள்".
நன்றிங்க மேடம்
Delete