ஆளாமல் ஆண்ட
குடும்பத்தின் அரசன்
கிழவனானான்!
அவன் முனகல்களில்
எரிமலை ஒன்றின்
இரைச்சல் இருந்தது!
வடிந்து வடிந்து
பெருநதி காட்டிய மணலோ பலரால்
கொள்ளை போனது!
மன்னன் ஆண்ட
பெருநிலம் எல்லாம்
பிள்ளைகள் கல்விக்கு
நன்கொடையானது!
மணிமகுடக் கற்கள்
மகள்களின்
இல்லறம் ஜோடிக்க
கழன்று போயின!
மகுடம் மட்டும்
தனி விலையாகி
மகாராணிக்கு
மருத்துவம் செய்தது!
கையின் கடகங்கள்
உடன்பிறந்தாள்களின்
கண்ணீர் துடைத்த
கைக்குட்டைகளாயின!
சிம்மாசனத்தின்
பின்னங்கால்கள்
உறவுவேடங்களின்
கடன்தீர்த்து முடிந்தன!
முன்னங் கால்களும்
ஊர்த் திருவிழாவுக்கு
தேர்ச்செலவாகி
கொடை புண்ணியம்
பெற்றது!
கண் போல் காத்துவந்த
கல்விச் சுவடிகள்
வெந்நீர் அடுப்பிற்கு
விறகாய் எரிந்தன!
மிச்சமிருந்தவை
கல்யாணவேட்டியும்
காதலி மோதிரமும்.
பழைய பட்டு
நல்ல விலைக்கு போனதும்
கழற்றாமல் கிடந்த
கைவிரல்மோதிரமும்
கடைசி சிலவுக்கு
காத்திருக்கின்றன!
கட்டியவேட்டிமட்டும்
காடுவரை. ….!
×××××××××
ப. திருநாவுக்கரசு

வணக்கம் சார், எப்போதும் போல உங்கள் கவிதைகள் வாழ்க்கையின் உண்மைச் சுவையை நெகிழ்ச்சியுடன் எடுத்துரைக்கின்றன. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி அன்பு ராஜா
Deleteவாழ்வின் நிலையாமையை எளிதாகச் சொல்லும் கவிதை.
ReplyDeleteஒரு குண்டுமணி தங்கம் இருந்தாலும் அதையும் கழற்றி விடுவார்கள்.
கட்டிய வேட்டி மட்டுமே கடைசியில் சேர்ந்து எரியும்.
நன்றி ஐயா
Deleteஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அல்லது புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று
ReplyDeleteநன்றிங்க மோகன்
Deleteவாழ்ந்து முடித்த அரச கிழவன்களின் வலி இன்றும் அனுபவமாய் குடும்பங்களில்
ReplyDeleteசொல்ல முடியாத வலி சொல்லில்
பேச முடியாத பெருந்துன்பம் தங்களின் வார்த்தைகளாய் இங்கு
நன்றி ஹபீப்
Deleteநாம் சேர்த்து வைத்த பொருள்,
ReplyDeleteநம் உடமை, நமக்கு சொந்தம்
என நினைத்தவை அனைத்தும்
நம் உடலை விட்டு காற்று போன பிறகு, அவைகளும் போய்விடும்.
இதனை அறியா மனிதர்க்கு
அழகாய் ஒரு கவிதை
வலியாய் வரிகளாய் தீட்டியுள்ளீர்.
நன்றி ஐயா
Deleteவாழ்வின் நிதர்சனம்! மனித வாழ்வு என்பது சிறகுகளைப் போல! நம்மை முடிந்த அளவு இலகுவாக வைத்துக் கொள்ள முயற்சிப்போம்!
ReplyDeleteநன்றிங்க ஆனந்
Deleteமனதை நெருடும் வரிகள்… reflection of reality!!!
ReplyDeleteநன்றி பிரீத்திம்மா
Deleteவாழ்க்கை சக்கரத்தின் ஏற்றமும் இறக்கமும் கூறும் உண்மை வரி(லி)கள்
ReplyDeleteநன்றி
Deleteஅருமையான வரிகள்.பூஜ்யத்தை தொடங்கி பூஜ்யத்தை முடியும் வாழ்க்கையை உணர்த்தும் உன்னத வரிகள் அத்தான்
ReplyDeleteநன்றி கார்த்தி
Deleteஎரிந்த விறகின் எஞ்சிய மிச்சம்.
ReplyDeleteமனித வாழ்வை வெறுமையாக்கும்
பெருவாழ்க்கைப் படம்; பாடம். கவிதை அருமை.
நன்றி
Deleteகடைசியில் வேட்டியாவது மிஞ்சியதே!! நல்ல கவிதை நயம்! தங்கள் கவிதையில் தவறிருக்க வாய்ப்பில்லை! மணல் கொல்லைபோனதா!!?? கொள்ளை போனதா!!??
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteகொள்ளைதான் திருத்திவிட்டேன். நன்றி.
Deleteசிறுக சேர்த்து, பெறுக வாழ் என்று சொன்னவர் சென்று விட்டார்.
ReplyDeleteசீரில்லா விலைவாசி உயர்வு சிதைக்கிறது, சேமிப்பு உணர்வை.
வளமாக வாழ வருமானம் போதவில்லை, வசை பாட உறவுக்கு பஞ்சமில்லை.
வருமானம் பெருக வழி தேடி சென்றேன்,
வருடங்கள் கடந்தன, வாய்ப்புகள் குறைந்தன.
பெருகிய பொறுப்புகள் தந்தன துன்ப நிகழ்வுகள்.
தீர்வை தேடி தொலைந்தது வாழ்க்கை.
கடந்தது வாலிபம், கண்டது முதுமை.
காண வேண்டுவது, ஒன்றே ஒன்று, அமைதியான கடைசி யாத்திரை.............
ஆஹா..
ReplyDeleteஇது ஒரு “வாழ்க்கை வீழ்ச்சி” அல்லது “விதி வென்ற மன்னன்” என்ற வலிமையான கவிதை. மனதை உலுக்கும் சுவை 👑💔🔥
ReplyDeleteநன்றிம்மா
Deleteஅழகான கவிதை. மனதைத் தொட்ட வரிகள்.எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அவலம் ஆளாமல் ஆண்ட அரசன், கடைசியில் கட்டிய வேட்டியோடு நிற்பது,மனதை என்னமோ செய்கிறது.தாளமுடியவில்லை
ReplyDeleteநிலையாமையை அழகாக சொல்லியுள்ளீர்கள்
நன்றிங்க ஐயா
Deleteமிகச் சிறந்த பதிவு. அய்யா அவர்களின் பதிவே தனி ரகம். கவிதத்துவமும், எதார்த்தம் வாழ்க்கை தத்துவங்களும் கலந்தது.
ReplyDelete
ReplyDeleteஆளாமல் ஆண்ட குடும்பத்தின் அரசன் – ஆசிரியர் ப.திருநாவுக்கரசு அவர்களின் கவிதையில் சமூக உண்மையின் தத்துவ மொழி பதிந்துள்ளது .
1. அறிமுகம்
பேராசிரியர் ப. திருநாவுக்கரசுஅவர்களின் “ஆளாமல் ஆண்ட குடும்பத்தின் அரசன்” என்ற கவிதை, ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியைக் கூறும் தனிப்பட்ட கதை அல்ல.
இது சமூகத்தின் பொருளாதார மாற்றங்கள், தலைமுறை இடைவெளி, மதிப்பு இழப்பு, மற்றும் அறிவின் விலைவாசி ஆகியவற்றை ஒரே கோட்டில் சித்தரிக்கும் சமூக தத்துவக் கவிதை ஆகும்.
கவிஞர் தன் பார்வையை ஒரு அரசனின் வாழ்க்கையின் வழியே சமூகத்தின் மாறுபட்ட அடுக்குகளைக் காட்டுகிறார்.
2. கவிதையின் கருப்பொருள் (Theme)
இந்தக் கவிதை ஒரு குடும்பத்தின் நிலைமாற்றத்தின் வழியாக “பொறுப்பு இழந்த ஆளுமை” எனும் கருத்தை மையமாகக் கொள்கிறது.
‘ஆளாமல் ஆண்டான்’ எனும் சொற்றொடர் ஒரு நையாண்டி முத்திரை மட்டுமல்ல; அது சமூகத்தில் அதிகாரத்தின் அழிவை சுட்டுகிறது.
கவிதையின் ஒவ்வொரு அடியிலும் —
• ஒரு மறைந்த பெருமை,
• ஒரு விற்றுச் செல்லும் மரபு,
• ஒரு சிதைந்து போகும் குடும்பம்,
• மற்றும் மனிதனின் நிமிட நிலைமை — நுணுக்கமாக பதியப்பட்டுள்ளது.
3. புனைவு மற்றும் காட்சியமைப்பு (Imagery & Symbolism)
கவிஞர் சின்னங்களின் வழியே குடும்பத்தின் வீழ்ச்சியைப் பேசுகிறார்:
குறியீடு பொருள் / விளக்கம்
மகுடம் பெருமை, அரசாட்சி, மரபு
மணிமகுடக் கற்கள் குடும்பப் பெண்களின் செழிப்பு, அழகு
சிம்மாசனம் அதிகாரம், மரியாதை, குடும்ப மையம்
கல்விச் சுவடி அறிவு, வருங்கால நம்பிக்கை
வேட்டி இறுதி மனித நிலை, மரணம்
ஒவ்வொரு சின்னமும் ஒரு வாழ்க்கை அடுக்கை இழந்து வரும் நிலையை காட்டுகிறது —
“மகுடம் மருத்துவச் செலவாகும்”, “கல்விச் சுவடிகள் அடுப்பில் எரிகின்றன”, “சிம்மாசனம் தேர்ச்செலவாகிறது” —
இவை அனைத்தும் மனிதனின் மதிப்பு பொருளாதார அளவுகோலால் தீர்மானிக்கப்படும் யுகத்தின் நிழல்கள்.
4. உளவியல் அடுக்குகள் (Psychological Dimensions)
கவிதையின் அரசன், வெளியில் வீழ்ந்தவன் போல தோன்றினாலும் உள்ளே சத்தமின்றி எரியும் எரிமலை.
அவன் ‘முனகல்களில் எரிமலை ஒன்றின் இரைச்சல் இருந்தது’ என்ற வரி, மனித மனத்தின் அழிவிற்கும் சுயவிமர்சனத்திற்கும் இடையே நிலைத்த மௌனத்தின் குறியீடு.
இது ஒரு சமூகப் பொருளாதார கவிதையாக இருந்தாலும், அதனுள் ஒரு தத்துவச் சுயநிலை மனவியல் பிம்பம் ஓடுகிறது.
5. மொழி மற்றும் பாணி (Language & Style)
ஆசிரியர் ப. திருநாவுக்கரசு அவர்களின் கவிதை மொழி:
• நெருக்கமான பேசுமொழி,
• காட்சியை நேரடியாக உயிரூட்டும் சொற்கள்,
• எளிமையில் ஆழமான தத்துவம்.
அதாவது, தத்துவத்தைப் பேசும் போது கூட பாடுபடாமல் பேசும் பாணி.
இதன் காரணமாக வாசகர் கவிதையின் உணர்வில் தன்னைத்தானே காண்கிறார்.
6. சமூக நோக்கம் (Social Consciousness)
கவிதையின் ஒவ்வொரு வரியிலும் — “பிள்ளைகள் கல்விக்கு நன்கொடையானது”, “மகுடம் மருத்துவம் செய்தது”, “கண்ணீர்த் துடைக்கும் கடகம்” —
இவை அனைத்தும் நமது காலத்தின் மதிப்பு இழப்பை, குடும்ப பாசத்தின் பொருளாதார விற்பனையை, மற்றும் தலைமுறை இடைவெளியை சாடுகின்றன.
இந்தக் கவிதை சமூகத்துக்கு ஒரு மௌன எச்சரிக்கை —
“பொன் வீடுகள் இருந்தாலும், மண் வீடாகி விடலாம்;
பணம் இருந்தாலும், மனம் இல்லையெனில் வாழ்வு வீணாகும்.”
7. முடிவு (Conclusion)
“கட்டிய வேட்டி மட்டும் காடுவரை” —
இந்த ஒரு வரி தான் முழு கவிதையின் தத்துவ நெஞ்சு. Warren Buffet said the shroud has no pocket . எதையும் எடுத்து செல்ல ஃகபன் துணியில் பாக்கெட் இல்லை!
மனிதன் இறுதியில் எதையும் எடுத்துச் செல்ல முடியாது.
அவன் ஆட்சி, செல்வம், கல்வி, மானம் — அனைத்தும் நிலைமாறும்.
ஆசிரியர் ப. திருநாவுக்கரசு அவர்களின் இந்தக் கவிதை, பாரம்பரிய நவீனவாதக் கவிதைகளின் வரிசையில் ஒரு மைல்கல்.
இது வாழ்வின் மாயை, மரபின் அழிவு, மனிதனின் வெற்று பெருமை ஆகியவற்றை கவிதை என்ற கண்ணாடியில் தெளிவாக பிரதிபலிக்கிறது.
8. மதிப்பீடு சுருக்கம்
அம்சம் மதிப்பீடு
சிந்தனை ஆழம் ★★★★★
காட்சியமைப்பு ★★★★★
சமூக நையாண்டி ★★★★☆
மொழி எளிமை ★★★★★
தத்துவ ஒலிப்பு ★★★★★
9. இறுதி வரி
ஆசிரியர் ப. திருநாவுக்கரசு அவர்களின் கவிதை —
ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்லாது,
ஒரு சமூகத்தின் சிந்தனையைக் சொல்கிறது.
பாநலனும்,பொருள் நலனும் விளக்கியவிதம் அருமை.
Deleteஎளியவன் எழுத்தை இத்தனை நுணுக்கமாக ஆய்ந்து இருப்பதை என்போல் இத்தளத்தில் பலரும் வியந்து இருப்பர். என்னைச் சுருக்கி தங்களை வியக்கிறேன். நன்றி சொல்ல வார்த்தையில்லை அன்பு சகோதரர் அவர்களே🙏
ReplyDeleteமிகச் சிறந்த பதிவு. அய்யா அவர்களின் பதிவே தனி ரகம். கவிதத்துவமும், எதார்த்தம் வாழ்க்கை தத்துவங்களும் கலந்தது
ReplyDeleteவந்தோம் பாடம் நடத்தினோம் என்று இல்லாமல் மிகவும் இலக்கிய நயத்துடன் பாடம் நடத்திய போதே தங்களுடைய திறமையும் ஆற்றலும் எங்களுக்கு தெரியும். தங்கள் கவிதைகள் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதைகளை நினைவுபடுத்துகிறது. அவர் இன்னும் மறையவில்லை தங்கள் போன்ற கவிஞர்களால் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்
ReplyDeleteநன்றி அன்பு மாலிக்
Deleteவாழ்க்கையின் எதார்த்தத்தை வடிவமாக்கி க் கண்முன் காட்டியிருக்கிறீர்கள்.
ReplyDeleteமகுடம் தரித்து வாழ்ந்த மனிதனின் மகுடங்களும் அவனுக்கு உதவாமல் அவனின் உடன்பிறந்தவர்களின் அடங்காத ஆசைக்குப் பலியாகி இறுதியில் முகம் துடைக்கும் துண்டு அளவுகூட ஆகாமல் கைக்குட்டையாவதை உருவகப்படுத்தி உள்ள விதம் சிறப்புக்குரியது.
படிக்க வேண்டும், படிக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து சேகரித்த சுவடிகளும் இறுதியில் வெந்நீர் அடுப்புகளுக்கு விறகாகும் துயரம் அதைத் தேடித் தேடிச் சேர்த்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அறிவாளியையும் ஆண்டியாக்கிவிடும் அழகான சொந்தங்களைக் குறிப்பிடும்விதம் அனுபவமாகிறது.
பணம் இல்லாத முதியவரின் வாழ்க்கையில் இறுதிவரை வருவது அவன் கட்டிய வேட்டிதான் என்று முற்றுப்புள்ளி வைக்காமல் முற்றுப்புள்ளிகளையே தொடரந்செய்து இறுதியில் ஆச்சரியத்தைக் காட்டி இருப்பது இன்னும் சொல்லுவதற்கு நிறைய உள்ளது, சொந்தமாக நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள் என்று கூறாமல் கூறி நிற்கின்றன.
மொத்தத்தில் இன்றைய முதியோரின் வாழ்க்கை இதயம் உள்ள எலும்புக்கூடாக உள்ளது என்பதை உணர்த்துகின்ற விதம் இதயத்தைத் தைக்கிறது.
உருவகங்களால் உருக்கொடுக்கப்பட்ட உன்னத கவிதை.
நன்றி பேராசிரியர் சிவா
Deleteஇன்று பெரும்பாலான குடும்பத் தலைவர்களின் நிலை, கண்முன்னே காட்சியாய் விரிகிறது.
ReplyDeleteநன்றி அன்பு குமார்
Deleteஎல்லாம் இருப்பவர் , இல்லாதவர் என உணரும் (உணர்த்தும்) தருணம்
ReplyDeleteநன்றி கிரி
ReplyDeleteவாழ்கையின் நிஜ மதிப்பை மனதில் பதிக்கச் செய்யும் கவிதை. அருமை ஐயா
ReplyDeleteநன்றிம்மா
ReplyDeleteஉங்களுடைய கவிதைகள் எல்லாம் கனமானது சார்.. படித்து முடித்தவுடன் மனதில் அதன் சுமை ஏறி கொள்கிறது
ReplyDeleteநன்றி அன்பே
Delete"காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே"எனும் பட்டினத்தடிகளின் வரிகளுக்கு கவிஞர்.திரு அரசு அவர்கள் உரையாசிரியராகி அருமையாக விளக்கிவிட்டார்!!!
ReplyDeleteநன்றிங்க தோழர்
Deleteஇது கவிதையல்ல… காலத்தின் குரல் போல உணர்கிறேன். அற்புதமான எழுத்து 👏
ReplyDelete