Monday, 9 December 2024

 



இன்னும் ஓரே ஒருவாட்டி

ப.திருநாவுக்கரசு

********************************

 கண்மூடிவிட்ட என்

செல்லம் காருகுட்டியுடன்

மீண்டும் நான்

பிறந்த வீட்டில்

குடிபோக ஆசை.

 

அன்று வர மறந்த

விருந்தினர்க்கு

அருஞ்சுவையில்

அமுதளிக்க ஆசை.


தாண்டிப்போன காலவண்டி

தடம்பிறழும் முன்னே

தந்தைதாய் தாள்பற்றி எந்தன்

கண்களில் ஒற்றிக்கொள்ள ஆசை.


தோண்டி எடுத்தாலும்

புதைகுள்ளே போகப்பார்க்கும்

வேண்டுதல் எல்லாமும் 

விரையமாகாது

விளைந்து வர ஆசை.


மாண்டால் புரிவதெல்லாம்

மனுஷ வாழ்வில் புரியாதோ?

மழைநாள் முடிந்தால்தான்

குடைமேல் மதிசெலுமோ?

 

            குழந்தைகள் விளையாட்டில்

            இன்னும் ஒரு தாட்டி 

            ஒரே ஒரு வாட்டி

            கேட்பதுதான் நானும் கேட்கிறேன்

             இன்னும் ஒரே ஒரு வாட்டி

                                       *****



11 comments:

  1. ஐயா இளமை நாட்கள் கண் முன்னே வந்து சென்றது...இன்னும் ஓரே ஒருவாட்டி !!!

    ReplyDelete
  2. அய்யா, எனக்கு இன்னொரு பிறவி இருந்தால் உங்கள் காருவாக இருக்க ஆசை

    ReplyDelete
  3. இன்னும் ஒரு வாட்டி
    உணர்வுகளை எடுத்துரைக்க வார்த்தைகள் வர மறுக்கின்றன.

    ReplyDelete
  4. வாழ்வின் அனுபவங்கள் உணர்வுகள் கவிதையாய். மிகச் சிறப்பு

    ReplyDelete
  5. உள்ளத்து உணர்வுகள் எழுத்தோவியமாய்.... மிக அருமை ஐயா..

    ReplyDelete
  6. அழகான வரிகள் மனதை வருடுகிறது

    ReplyDelete
  7. அற வழி அனுபவம்... அய்யா வலி .. அருமை...

    ReplyDelete
  8. அழகான நாட்களை நினைவூட்டும் கவிதை. அருமை ஐயா.

    ReplyDelete

  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...