புலவன் தோன்றினான்
(மலர்ந்த நாள்: 11-12-1882)
தமிழரின் உயிநிகர் தமிழ் நிலை தாழ்ந்ததால்
இமை திறவாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா:
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
(பாரதி மாணவர் பாரதிதாசன் தம் குருவுக்கு)
.jpeg)
தமிழ் நிலை தாழ்ந்ததால் , தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும் -பாரதிப் புலவன் தோன்றினான் ....கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு,காடு கமழும் கற்பூரச் சொற்கோ!.....தமிழால் பாரதி தகுதி பெற்றதும்......
ReplyDeleteதமிழ், பாரதியால் தகுதி பெற்றதும் ..அருமை அருமை
அய்யன் பாரதி புகழ் பாடும் அய்யா திருநாவுக்கரசர் நீர் வாழ்க !!!
ReplyDeleteவெகு சிறப்பு ஐயா🙏
ReplyDeleteஇருந்தபோது பெரிதாக போற்றப்பட இல்லை இவரெனினும்.. இப்போதெல்லாம் நிறைய " நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ " என்கின்றனர்.. அதுவும் தங்களைப் போன்றோரின் பங்களிப்பு பால்.. வணக்கம் அய்யா.
ReplyDeleteசேற்றில் முளைத்த செந்தாமரை- தமிழுக்கு பெருமை, --------
ReplyDeleteதமிழ் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை ஐயா.
ReplyDeleteமிகச் சிறப்பு
ReplyDeleteபாரதி போற்றுவோம்
ReplyDelete